எதிர்கால பொருளாதாரம் தொடர்பில் பிரதமர் பாராளுமன்றத்தில் விசேட உரை - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/20/2017

எதிர்கால பொருளாதாரம் தொடர்பில் பிரதமர் பாராளுமன்றத்தில் விசேட உரை


கட்டியெழுப்பப்பட்ட நாட்டை பாதுகாத்து பொருளாதார ரீதியில் வலுவூட்டப்படுவதன் தேவையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய தேசிய வர்த்தகக் கொள்கை தற்பொழுது தயாரிக்கப்பட்டு வருகின்றது. புதிய அபிவிருத்தி வங்கியொன்றும் உருவாக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

நாட்டின் எதிர்கால பொருளாதார நிலைமை குறித்து இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் உரையாற்றினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளை திருத்தி, நாட்டை முன்னேற்ற பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்று பிரதமர் கூறினார். இதன் அடிப்படையில், நாட்டின் வேலையில்லா பிரச்சினையை குறைப்பதற்கும் வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகையை குறைப்பதற்கும் சமகால அரசாங்கத்தினால் முடிந்துள்ளது. அரச நிதி நிலைமை உறுதியான நிலையில் உள்ளது.

விற்பனை செய்யக்கூடிய வகையில், மூலப் பொருட்களை உற்பத்தி செய்வது குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. 2018 - 2019 வரையான இரண்டு வருட காலப்பகுதியில் 3 இலட்சத்து 4ஆயிரம் கோடி ரூபா தொகையை கடனாக செலுத்த வேண்டியுள்ளது. இதற்காக அரசாங்கம் இப்போதிருந்தே கடனுக்கான விசேட முகாமைத்துவ மூலோபாயங்களை வகுத்துள்ளது. சில சட்டமூலங்களுக்கு திருத்தங்களை மேற்கொண்டு , அதனூடாக நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய விநியோக வலைப்பின்னல் மேலும் விருத்தி அடைந்துள்ளது. உணவுப் பொருட்களுக்கான வரிகள் கடந்த காலங்களில் குறைக்கப்பட்டன. இதன் நன்மைகளை பொதுமக்களுக்கு வழங்கும்படி பாராளுமன்ற உறுப்பினர்களை இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டார்.

2025ஆம் ஆண்டளவில் அறிவை அடிப்படையாகக் கொண்ட சமுதாய சந்தையின் மூலம் பொருளாதாரத்தை மேலும் கட்டியெழுப்பமுடியும் .

ஏற்றுமதித் துறையை மேலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிறிய மற்றும் மத்திய பரிமாண தொழில்முயற்சிகளுக்கு வெளிநாட்டு சந்தைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும்; அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எதிர்வரும் மூன்றுவருட காலத்திற்கான முழுமையான பொருளாதார மூலோபாய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

கல்வித்துறையில் மறுசீரமைப்புக்கள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. மனித வள சந்தையில் ஆற்றலை மேம்படுத்துவதற்காக தனியார் துறையும் உள்வாங்கப்பட்டுள்ளது. பொதுபோக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக இதனடிப்படையில் மற்றுமொரு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முறைசாரா தொழில் வாய்ப்புக்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கக்கூடிய வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில், மேல் மாகாணத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு தேவையான யோசனைகள் அடுத்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages