கிழக்கு மாகாண ஆசிரியர் நியமன பிரச்சினைக்கு தீர்வு வழங்க ஜனாதிபதி உறுதி - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/29/2017

கிழக்கு மாகாண ஆசிரியர் நியமன பிரச்சினைக்கு தீர்வு வழங்க ஜனாதிபதி உறுதி

வெளிமாகாணங்களில் நியமனம் வழங்கப்பட்டுள்ள கல்வியல் கல்லூரி ஆசிரியர்களை, குறிப்பாக கிழக்கு மாகாண ஆசிரியர்களை அவர்களுடைய சொந்த மாகாணங்களிலேயே நியமிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குறித்த பிரச்சினை தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அமைச்சர் ஹக்கீமின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கல்வியல் கல்லூரியில் டிப்ளோமா பட்டம்பெற்றவர்களுக்கு அண்மையில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.
இதன்போது வெளி மாகாணங்களில் நியமனம்பெற்ற கிழக்கு மாகாண ஆசிரியர்களையும், ஏனைய மாகாண ஆசிரியர்களையும் அவர்களுடைய சொந்த மாகாணங்களில் இடமாற்றம் செய்யுமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கட்டாரில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் வெற்றிடங்கள் தாராளமாகவுள்ள நிலையில், அவை நிரப்பப்படாமல் கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு வெளி மாகாணங்களில் நியமனம் வழங்கப்பட்டுள்ளன.
அதுபோல ஏனைய மாகாணங்களிலும் இவ்வாறு நியமனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவர்கள் சொந்த மாகாணங்களை விட்டு வேறு மாகாணங்களுக்கு செல்லும்போது, பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேரிடுவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
இதனைக் கேட்டறிந்த ஜனாதிபதி, வெளி மாகாணங்களில் நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்களை அவர்களுடைய சொந்த மாகாணங்களில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages