தனியார் நிதி நிறுவனங்களினால் பாதிக்கப்பட்ட கிராம மக்களை மீட்பதற்கான நாடளாவிய செயற்திட்டம் அமுல்படுத்தப்படும் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/20/2017

தனியார் நிதி நிறுவனங்களினால் பாதிக்கப்பட்ட கிராம மக்களை மீட்பதற்கான நாடளாவிய செயற்திட்டம் அமுல்படுத்தப்படும்தனியார் நிதி நிறுவனங்களிலிருந்து முறையற்ற விதத்தில் கடன்களைப் பெற்றுக்கொண்டதன் காரணமாக அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள கிராம மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான நாடளாவிய செயற்திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும்.
இதற்கான ஆலோசனை 2018 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட பிரேரணையில் முன்வைக்கப்படும்
வறுமையை இல்லாதொழிக்கும் கிராமசக்தி மக்கள் இயக்கத்தை மக்கள் மயப்படுத்தும் தேசிய நிகழ்வு நேற்ற (20) பிற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந்ந நிகழ்வில் கலந்தகொண்ட உரையாற்றகையிலேயே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த விடயங்களை தெரிவித்தார்.
 
பலமான, கௌரவமான பொருளாதாரத்தை உடைய பேண்தகு பொருளாதாரத்திட்டம் இலங்கை தேசத்தில் சகல வகையிலும் வறுமையை இல்லாதொழிக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் குறிக்கோளிற்கு அமைய அமுல்படுத்தப்படும் முக்கியமான செயற்திட்டமாக கிராமசக்தி செயற்திட்டம் காணப்படுகின்றது.
 
முதற்கட்டமாக நாடு பூராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட 5,000 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளடங்கும் வகையில் பலமான, வலிமையோடு, முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட வறுமையிலிருந்து மீட்சியடைந்து வெற்றியின் பாதையில் பயணிக்கும் மக்கள் அமைப்புக்களை உருவாக்கி அவை வர்த்தகச் சந்தைகளை வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல் கிராம சக்தி இயக்கத்தினூடாக மேற்கொள்ளப்படும்.
பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் மற்றும் இளஞர்களின் பங்களிப்புடன் சந்தை வாய்ப்பிற்கான கிராமிய அபிவிருத்தி திட்டத்தினை உருவாக்கும் வலுவினைப் பெற்றுக்கொடுத்து அதனை பிரதேச மற்றும் மாகாண அபிவிருத்தி திட்டங்களுடன் ஒன்றிணைத்தல் இதன் நோக்கமாகும்.
 
வலுவான மக்கள் அமைப்புக்களை கிராம மட்டத்தில் உருவாக்குதல், சகல மக்களின் பங்களிப்புடன்; கட்டியெழுப்பப்படும் கிராம அபிவிருத்தி திட்டத்தை உருவாதல், தனிநபர் முதலீடு 8000 ரூபா என்றவகையில் அரச முதலீடு கிராமங்களிற்கு கிடைத்தல், பிறரின் தங்கிவாழும் மனநிலையிலிருந்து மீண்டு தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு விசேட பயிற்சிகள் மற்றும் கிராம மூலதனத்தை பலப்படுத்தும் சேமிப்பு திட்டம் என்பன இதன் முக்கிய அனுகூலங்களாகும்.
 
நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி , செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக்குவதற்கு வளங்களைப் பெற்றுக்கொடுக்கும் கொள்கையிலிருந்து விலகி பொருளாதார பிரச்சினைகளை உடைய மக்களை அதிலிருந்து மீட்டு அவர்களது பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு தேவையான வசதிகளையும் வரப்பிரசாதங்களையும் வழங்குதல் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என்றும் தெரிவித்தார்.
அரசியல்ரீதியில் ஒருவருக்கொருவர் குறை கூறுவதை விடுத்து வறுமையிலிருந்து விடுபடுவதற்காக கடந்த பல வருடகாலமாக சகல அரசாங்கங்களினாலும் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்களை அனுபவமாகக் கொண்டு கிராமசக்தி மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுதல் அனைவரினதும் கடமையாகும் என்றும் ஜனாதிபதி கூறினார்..
 
சுற்றறிக்கைகள் மற்றும் விதிமுறைகளிற்கு முன்னுரிமையளிப்பதை விட தமது மனசாட்சிக்கு ஏற்ப கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்த ஜனாதிபதி , இந்த செயற்திட்டத்தில் சகல மாவட்ட செயலாளர்களும், பிரதேச செயலாளர்களும் நிர்வாகத்தை நெறிப்படுத்துபவர்களாக அன்றி அதனுடன் இணைந்த அபிவிருத்தியை நெறிப்படுத்துபவர்களாக செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
 
சகல மாவட்டங்களிலும் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களுள் கிராம சக்தி மக்கள் இயக்கத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த ஜனாதிபதி , எதிர்காலத்தில் மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் வருகைதந்து முன்னேற்ற மீளாய்வுகளில் ஈடுபட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
 
மக்களை வறுமையிலிருந்து மீட்டு அவர்களதும் நாட்டினதும் பொருளாதாரத்தை சுபீட்சமடையச் செய்வதற்கான காலத்தின் தேவையை நிறைவு செய்யும் கிராம சக்தி மக்கள் இயக்கத்துடன் நாட்டை நேசிக்கும் அனைவரும் கைகோர்ப்பார்கள் என தான் நம்புவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
 
கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் தேசிய செயற்திட்டம் இதன்போது வெளியிடப்பட்டதுடன், 2017 ஆம் ஆண்டிற்கான ஆயிரம் கிராமங்களிற்கான வேலைத்திட்டத்தை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தல், இற்றைப்படுத்தப்பட்ட 2040 கெமிதிரிய கிராமங்களை கிராம சக்தி மக்கள் இயக்கத்துடன் ஒன்றிணைத்தல், வறுமையை இல்லாதொழிக்கும் தேசிய செயற்திட்டத்திற்குரிய தனியார் துறையின் ஒத்துழைப்பினை உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்தல் என்பனவும் இதன்போது இடம்பெற்றன.
 
மேலும் கிராமங்களில் வாழும் இளைஞர் யுவதிகளுக்கு தகவல் தொழில் நுட்ப அறிவினைப் பெற்றுக்கொடுப்பதற்கான எயார்டெல் நிறுவனத்துடன் இணைந்த செயற்திட்டத்தினை அமுல்படுத்துதலும் இதன்போது இடம்பெற்றது.
 
சர்வதேச விவசாய அபிவிருத்தி நிலையத்தினால் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள விவசாய அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் தொழில் முயற்சிகளில் ஈடுபடும் இளைஞர் யுவதிகளுக்கு கடன் வசதிகளும் இதன்போது வழங்கப்பட்டன.
 
2018 ஆம் ஆண்டினை தேசிய உணவு உற்பத்தி ஆண்டாக பெயரிட்டு நாட்டின் விவசாயத் துறைக்காகவும் உணவு உற்பத்தி செயற்பாட்டிற்காகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனயினால் மேற்கொள்ளப்படும் அர்ப்பணிப்பினை பாராட்டி சர்வதேச விவசாய அபிவிருத்தி அமைப்பினால் ஜனாதிபதிக்கு விசேட விருது இதன்போது வழங்கப்பட்டது .
 
மக்கள் பிரதிநிதிகள், ஆளுநர்கள், மாகாணங்களின் முதலமைச்சர்கள் மாகாண மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு அதிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Read 5 times
 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages