'எங்களைத் தாண்டி தொடுங்க..'- மெர்சல் பிரச்னையில் கைகோர்த்த தல-தளபதி ரசிகர்கள்! - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Friday, October 20, 2017

'எங்களைத் தாண்டி தொடுங்க..'- மெர்சல் பிரச்னையில் கைகோர்த்த தல-தளபதி ரசிகர்கள்!தமிழ் சினிமாவின் மாஸ் கலெக்‌ஷன் டேக்கர்ஸ் விஜய், அஜித் தான். இவர்களது படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு சொல்லித் தெரியவேண்டியது இல்லை. இரு நடிகர்களின் ரசிகர்களும் போட்டி போட்டு படத்தை ஹிட் ஆக்குவார்கள். சமூக வலைத்தளங்களில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்குள் எப்போதும் ஒரு சண்டை இருந்துக்கொண்டே இருக்கும். யார் படம் அதிக வசூல் என்பதில் தொடங்கி காரணமே இல்லாமல் அடித்துக்கொள்வார்கள். தற்போது பா.ஜ.க-வின் தமிழக நிர்வாகிகள் மெர்சல் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஜி.எஸ்.டி தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.


பா.ஜ.க-வினர் நடிகர் விஜய்க்கும், இயக்குநர் அட்லீக்கும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அதனால், குறிப்பிட்ட வசனங்களை நீக்க முடிவு செய்துள்ளது படக்குழு. இதை விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்க்க, அஜித் ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு சமூக வலைதளங்களில் 'மெர்சல்' படத்துக்கு தங்கள் ஆதரவைக் கொடுத்து வருகின்றனர்.

படத்தில் ஜி.எஸ்.டி வரி பற்றிய காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடரப்படும் : தமிழிசை அஜித் ஃபேன்ஸ் : எங்களைத் தாண்டி தொடுங்க பார்க்கலாம்.

ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு (அரசியல்வாதிக்கு) கொண்டாட்டமாம்... இதுதான் காலம் காலமா நடக்குது இங்க..!

'வீரம்' படத்து அஜித்தையும், 'மெர்சல்' படத்து விஜய்யையும் இணைச்சு போட்டோஷாப் பண்ணியிருக்காங்க.

நம்ம ஒண்ணா இருந்தா இது மட்டும் இல்ல ஜல்லிக்கட்டு மாதிரி எல்லாத்துக்கும் தீர்வு கிடைக்கும்.

அஜித்தா விஜய்யானு வந்தா அஜித் தான். அதுவே பா.ஜ.க-வா விஜய்யானு வந்தா to any extent விஜய் அண்ணா தான். அப்படி ஓரமா போய் பேசாம வெறிச்சி வெறிச்சி பாத்துக்கிட்டே உட்காருங்கடே.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages