திருகோணமலை, ஆசிரியர் பற்றாக்குறை; மாணவர்கள் வீதியில் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/13/2017

திருகோணமலை, ஆசிரியர் பற்றாக்குறை; மாணவர்கள் வீதியில்


திருகோணமலை, முள்ளிப்பொத்தானை சிங்கள மகா வித்தியாலயத்தில் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால், அதனை நிவர்த்தி செய்து தருமாறு கோரி, திருகோணமலை - கொழும்பு பிரதான வீதியில் இறங்கி, பாடசாலை மாணவர்கள்,  (11-10-2017) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், மாணவர்களுடன் பெற்றோர்களும் இணைந்திருந்தமையால், திருகோணமலை - கொழும்பு வீதியின் போக்குவரத்து சிறிது நேரம் ஸ்தம்பித்தது.
இதனால் சம்பவ இடத்துக்கு விரைந்த தம்பலகாமம் பொலிஸார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெற்றோர்களில் ஐவரைத்  தம்மோடு வருமாறும் இது சம்மந்தமாக மாகாண கல்வித் திணைக்களத்தோடு கலந்துரையாடி, உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தனர்.
இந்த வாக்குறுதியை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
மேற்படி முள்ளிப்பொத்தானை சிங்கள மகா வித்தியாலயத்துக்கு ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு ஐந்து ஆசிரியர்கள்  பற்றாக்குறை நிலவுவதாக, மாணவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages