728x90 AdSpace

Latest News

திருகோணமலைக் கடலை எழிலூட்டும் புறாமலை பற்றிய ஓர் சிறப்பு பார்வை!!


உல்லாசப் பயணிகள் இலங்கையை நோக்கி படை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். யுத்த காலத்தின் பின் வருகை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இலங்கையின் இயற்கை அழகு அவர்களைக் கவர்ந்து இழுக்கிறது. விடுமுறையைக் கழிப்பதற்காக அக் காலங்களில் பெரும் தொகையாக வருகின்றார்கள்.

 கிழக்கு இலங்கையின் இயற்கை எழில் அனைவரையும் தன்வசம் இழுத்துக் கொள்ளும். அழகு கொஞ்சும் மாவட்டமாக திருகோணமலை விளங்குகிறது



 கோணேசர் ஆலயம், கன்னியா நீரூற்று புராதன சின்னங்கள் கிண்ணியா சேருவில நிலாவெளிகடல் புறாமலை என உல்லாசப் பயணிகளுக்கு கண்டு களிக்க அநேக இடங்கள் இங்கு இருக்கின்றன.




 படகுப் பயணம் சூரியக் குளியல் நீச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த இடம்.
திருகோணமலையில் இருந்து 20கிலோ மீற்றர் தூரத்தில் வடமேற்கில் அமைந்துள்ளது நிலாவெளி. இது கரையோரப் பிரதேசமாக இருக்கிறது.
இங்கு கடலில் மீன்பிடித்தொழில் நடைபெறுகிறது. மிகச் சிறந்த சுற்றுலாத் தளங்களில் ஒன்று. நட்சத்திர சுற்றுலா விடுதிகள் பலவும் இங்குள்ளன.


 நிலாவெளிக் கடற்கரையில் இருந்து புறாமலை 2.5 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. நிலாவெளிக் கடற்கரை மிகவும் அழகானது. ஆதற்கு மேலும் அழகு ஊட்டி நிற்பது புறாமலை. முன்னர் மக்கள் தனியாரின் படகுகளில் சென்று குளித்து சாப்பிட்டு மகிழ்ந்து வருவார்கள். புறாமலை என்று சொன்ன போதும் இவற்றில் இரண்டு தீவுகள் உள்ளன. பெரிய தீவு சுமார் 200 மீற்டர் நீளமும் 100 மீற்றர் அகலமும் கொண்டது.



 இப்பொழுது இவ்விடம் தேசிய விலங்கு சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது. படகு போக்குவரத்து நடாத்துகின்றார்கள். மலையைச் சுற்றி ஆழம் குறைந்த கடல். அழகிய முருகை கற்களோடு கூடியது. கற்களைப் பாரத்து இரசிக்கலாம்.


 புறாக்கள் அக் காலத்தில் இங்கு நிறைந்திருந்ததால் புறாமலை என்ற பெயர் வந்தது.
 


 இங்கு 100 வகையான பவளப் பாறைகளும் முன்னூறு வகையான பவள பாறை மீன்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்
 

 சூரிய ஒளியில் Glittering coral சிறு சிறு வர்ணக் கற்கள் தெறிக்கும் அழகே தனிதான். நீரினினுள் கடல் வாழ் மீன்கள் உயிரினங்கள் நீந்திச் செல்வதை கண்டு மகிழலாம்.








  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: திருகோணமலைக் கடலை எழிலூட்டும் புறாமலை பற்றிய ஓர் சிறப்பு பார்வை!! Description: Rating: 5 Reviewed By: ST
Scroll to Top