தொடர் பாலியல் சீண்டல்களால் செயலிழந்த பெண் ரோபோ - Trincoinfo

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, October 7, 2017

தொடர் பாலியல் சீண்டல்களால் செயலிழந்த பெண் ரோபோ

 ஆஸ்திரியாவில் தொழில்நுட்பக் கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்ட பெண் ரோபோவுக்கு பார்வையாளர்கள் அளித்த தொடர் பாலியல் துன்புறுத்தலால் மோசமாக பாதிக்கப்பட்டு பழுதடைந்துள்ளது.
ஆஸ்திரியாவின் லின்ஸ் நகரில் நடைபெற்ற தொழில்நுட்பக் கண்காட்சியிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது.
ஸ்பெயினின் பார்சிலோனாவை சேர்ந்த ரோபோ வடிவமைப்பாளர் செர்ஜியோ சாண்டோஸ் அண்மையில் 'சமந்தா' என்ற செயற்கை நுண்ணறிவுக் கொண்ட பெண் ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளார்.
3000 பவுண்டுகள் மதிப்புடைய குறித்த ரோபோவை லின்ஸ் நகரில் நடந்த ஆர்ட்ஸ் எலக்ட்ரோனிகா விழாவில், காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.
அந்த கண்காட்சிக்கு வந்த ஆண்கள் ரோபோவை சீண்டியதில் அதன் இரண்டு விரல்கள் உடைந்துவிட்டன.
விழாவில் குவிந்த மக்கள் குறித்த சமந்தா ரோபோவின் மார்பு, கை, கால் மீது ஏறியதால், ரோபோவின் இரண்டு விரல்கள் உடைந்துவிட்டன மற்றும் ரோபோ மோசமாக அழுக்கடைந்துவிட்டது என அதன் வடிவமைப்பாளர் புகார் தெரிவித்துள்ளார்.
நுண்ணறிவுக் கொண்ட இந்த ரோபோ, நாம் பேசினால் பதிலளிக்கும். நாம் அதன் மார்பை, இடுப்பை தொட்டால் பெண்கள் போன்று ஒலி எழுப்பும்.
இதனிடையே, மக்களுக்கு இதன் தொழில்நுட்பம் புரியவில்லை. அவர்கள் மோசமாக காட்டுமிராண்டிகள் போல இந்த ரோபோவிடம் நடந்துள்ளார்கள் என்று இதன் வடிவமைப்பாளர் சாண்டோஸ் வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.
புதிய பாலியல் ரோபோக்கள் பாலியல் தொழிலுக்கு மாற்றாக வருங்காலத்தில் இருக்கும் என்று சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ரோபோக்கள் பாலியல் தேவைகளுக்காக பெண்கள் கடத்தப்படுவதை குறைக்கும் என்றும் ஆய்வாளர்கள் வாதிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad