இலங்கை அணிக்கு இப்படி ஒரு நிலைமையா..பாகிஸ்தானுடன் வொயிட் வாசை தவிர்க்குமா? - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/22/2017

இலங்கை அணிக்கு இப்படி ஒரு நிலைமையா..பாகிஸ்தானுடன் வொயிட் வாசை தவிர்க்குமா?


இலங்கை அணி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இலங்கை அணி, பாகிஸ்தான் அணியுடனான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
இதையடுத்து நடந்த ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் நான்கு போட்டிகளையும் பாகிஸ்தான் அணி வென்று 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஐந்தாவது மற்றும் இறுதிப் போட்டி வரும் 23-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இப்போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால், இலங்கை அணி வொயிட் வாஷ் செய்யப்படும். பாகிஸ்தான் தொடரை தொடர்ந்து இலங்கை அணி இந்த ஆண்டு தொடர்ந்து மூன்று முறை வொயிட் வாஷ் செய்யப்பட்ட அணி என்ற நிலையை பெறும்.
இதற்கு முன் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இலங்கை அணி 5-0 என்ற கணக்கிலும், இந்திய அணிக்கு எதிரான தொடரில் இலங்கை அணி 5-0 என்ற கணக்கிலும் தொடரை இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages