ரோஹிங்கிய அச்சுறுத்தல்; அரம்பேபொல ரத்தனசார தேரர் பஸ்ஸுக்குள் நேற்று கைது - wwwTRINCOINFO.com - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/23/2017

ரோஹிங்கிய அச்சுறுத்தல்; அரம்பேபொல ரத்தனசார தேரர் பஸ்ஸுக்குள் நேற்று கைது - wwwTRINCOINFO.comகல்கிஸ்ஸையில் ரோஹிங்கிய அகதிகள் மீதான தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான அரம்பேபொல ரத்தனசார தேரரை, நேற்று பொலிஸார் கைது செய்தனர்.பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையிலேயே சந்தேக நபர் நேற்றுக் காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர நேற்று தெரிவித்தார்.
சந்தேக நபர் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணம் செய்த பஸ் நேற்று அதிகாலை நிட்டம்புவ பிரதேசத்தில் இடைமறிக்கப்பட்டு, இவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். கைதின்போது சந்தேக நபரிடமிருந்து இருவேறு பெயர்களைக் கொண்ட இரண்டு தேசிய அடையாள அட்டைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். சந்தேக நபர் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் (05) குருநாகலையில் பிறந்தவராவார்.
இவரது ஒரு அடையாள அட்டையில் அரம்பேபொல ரத்தன சாரர் தேரர் எனும் பெயரும் இல.86,பூர்வாராம வீதி, கொழும்பு 05 என்ற முகவரியும் காணப்படுகிறது. இந்த அட்டை 2011 ஆம் ஆண்டு டிசம்பர் (09 ) விநியோகிக்கப்பட்டுள்ளது. மற்றைய தேசிய அடையாள அட்டையில் தென்னகோன் முதியன்சலாகே சாமர தர்மசிறி தென்னகோன் எனும் பெயரும், தெற்கு களுத்துறை தூவபன்சல வீதி எனும் முகவரியும் காணப்படுகிறது. சாதாரண குடிமகனைப்போன்ற புகைப்படத்தைக் கொண்டுள்ள இந்த அட்டை 2017 ஆம் ஆண்டு ஜுலை (05) விநியோகிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தேசிய அடையாள அட்டைகளைக் கொண்டுள்ளதால் இவர் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். அத்துடன் கல்கிஸ்ஸையில் ரோஹிங்கிய அகதிகள் மீதான தாக்குதல் சம்பவத்தன்று, அரம்பேபொல ரத்தனசார தேரர் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதையும் இனவாதத்தை தூண்டும் வகையில் பாரதூரமான வார்த்தைப் பிரயோகங்கள் பிரயோகித்தமையும் சி.சி ரி.வி கமரா மூலம் ஔிப்பதிவாகியிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
தலைமறைவாகியிருந்த அரம்பேபொல ரத்தனசார தேரரை சுமார் ஒரு மாத காலமாக பொலிஸார் தேடி வந்திருந்த நிலையிலேயே நேற்றுக் காலை அவர் கைது செய்யப்பட்டார். அவர் தலைமறைவாகியிருக்க உதவியவர்கள் மீதும் பொலிஸ் திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.
பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் தலைமையகத்திலுள்ள பொலிஸ் குழுவே நேற்றுக் காலை தேரர் பயணம் செய்த கொழும்பு, கண்டி பஸ்சை நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து இடைமறித்து அவரைக் கைது செய்துள்ளது.கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணைகளின் முடிவில் அவர் கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவாரென்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.ரோஹிங்கிய அகதிகள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை ஒரு பெண் உள்ளிட்ட எட்டு பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்களுள் இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages