பிரபல ஆபாசப் பட நடிகை மியா கலீஃபா சினிமாவுக்கு வருகிறார் - வரவேற்கும் மல்லுவுட்! - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/31/2017

பிரபல ஆபாசப் பட நடிகை மியா கலீஃபா சினிமாவுக்கு வருகிறார் - வரவேற்கும் மல்லுவுட்!

 
நடிகை சன்னி லியோனை தொடர்ந்து உலகின் பிரபல ஆபாசப் பட நடிகை மியா கலீஃபா இந்திய சினிமாவுக்கு வருகை தருகிறார். கனடாவில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது. வெப் மாடலாக நடித்து வரும் மியா கலீஃபா தற்போது இந்திய திரையுலகிற்கு அறிமுகமாகவுள்ளார். லெபனான் நாட்டைச் சேர்ந்த இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆபாசப் பட நடிகையாக விளங்கியவர் ஆவார்.

சன்னி லியோன் தமிழில் ஜெய் நடித்த 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கிலும் இப்போது நடித்து வருகிறார். பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னி லியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சன்னி.

சன்னி லியோனை தொடர்ந்து ஆபாசப் பட நடிகை மியா கலீஃபாவும் இந்தியாவிற்கு வருகிறார். வெப் மாடலாக நடித்து வரும் மியா கலீஃபா தற்போது மலையாள திரையுலகில் அறிமுகமாவதன் மூலம் இந்திய சினிமாவில் கலக்க இருக்கிறார்.

லெபனான் நாட்டைச் சேர்ந்த மியா கலீஃபா பிறந்தது பெய்ரூட் நகரத்தில். பிறகு இவரது குடும்பம் 2000-ம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து சென்றுவிட்டனர். மியா கலீஃபா டெக்சாஸ் பல்கலைகழகத்தில் வரலாற்றுப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். 18 வயது நிரம்பிய உடனேயே மியா கலீஃபா அமெரிக்கர் ஒருவரை கடந்த 2011-ல் திருமணம் செய்து கொண்டார்.

மியா கலீஃபா ப்ளோரிடாவில் ஒரு பர்கர் ஷாப்பில் வேலை செய்துக் கொண்டிருந்தார். இங்கு வந்த ஒருவரின் தூண்டுதலின் பேரிலேயே பார்ன் இன்டஸ்ட்ரிக்குள் நுழைந்தார் மியா. இவர் இத்துறையில் நுழைந்ததில் இருந்து இவரது பெற்றோர் இவரிடம் பேசுவதில்லை.

அக்டோபர், 2014-ல் தான் மியா கலீஃபா பார்ன் உலகில் நுழைந்தார். பார்ன் உலகில் நுழைந்த சிறிய காலத்திலேயே இவர் உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்துவிட்டார். மதம் சார்ந்தும் பல சர்ச்சைகள் எழுந்தபோதும் தொடர்ந்து பிரபலமான நடிகையாகவே பார்ன் உலகில் வலம் வருகிறார்.

சமீபத்தில் வெளிவந்த உமர் லுலு இயக்கிய சங்க்ஸ் (Chunkzz) என்ற மலையாள அடல்ட் காமெடி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் உமர் விரைவில் தொடங்கவுள்ளார்.

சங்க்ஸ் முதல் பாகத்தில் நடித்த ஹனிரோஸ், பாலுவர்கீஸ் ஹீரோ, ஹீரோயினாக மீண்டும் நடிக்கவுள்ள நிலையில் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க மியா கலீஃபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. வரும் 2018 மே மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தை பிரபல பாலிவுட் நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages