இலங்கை வாகனச் சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி : விபரம் உள்ளே..! - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/06/2017

இலங்கை வாகனச் சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி : விபரம் உள்ளே..!

இலங்கை வாகன சாரதிகளுக்கு எதிரான அபராதத் தொகையை செலுத்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஸ்ரீலங்காவில் இதுவரையில் அபராதம் செலுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்படும் முறையினை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள முறைப்படி, முதலில் அபராத தொகையை செலுத்திவிட்டு பின்னர் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். எனினும் இந்த முறை கடினம் என்பதனால் அதனை மாற்றுவது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து பொலிஸாரினால் வழங்கப்படும் அபராத பத்திரத்தை, தபால நிலையத்தில் ஒப்படைத்து பணத்தை செலுத்த வேண்டும். பின்னர் அதனை மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்நிலையில் சாரதிகளின் அசளகரியங்களை தவிர்க்கும் நோக்கில், எதிர்வரும் காலங்களில் இணையத்தளம் ஊடாக அபராதம் செலுத்துவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறை அறிமுகப்படுத்தி வைத்தால் அந்த சந்தர்ப்பத்திலேயே பணத்தை செலுத்தி சாரதி அனுமதி பத்திரத்தை மீள பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும் இது சாரதிகளுக்கு சிரமங்களை ஏற்படுத்தாது.
இதுவரை உள்ள முறையினால் வாகனச் சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ள நிலையில் அறிமுகப்படுத்தப்பவுள்ள புதிய முறையினால் சாரதிகள் பெருமளவு நன்மையடைவர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages