தாடி மீசையுடன் மோனா லிசா ஓவியம்: 7,50, 000 டொலர்களுக்கு விற்பனையானது - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Tuesday, October 24, 2017

தாடி மீசையுடன் மோனா லிசா ஓவியம்: 7,50, 000 டொலர்களுக்கு விற்பனையானது


பாரிஸில் நடைபெற்ற ஓவியக்கண்காட்சியில் மோனா லிசாவிற்கு தாடி, மீசை இருப்பது போன்று வரையப்பட்ட ஓவியம் 7,50, 000 டொலர்களுக்கு விற்பனையாகியுள்ளது.
பாரிஸில் சோதபே என்ற ஓவிய விற்பனை நிறுவனம் நடத்திய ஓவியக்கண்காட்சியில் பல புதிய ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன.
அவற்றில் பல ஓவியங்கள் ஏலம் விடப்பட்டன.
உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மறு உருவாக்க ஓவியமும் இந்த ஏலப் பட்டியலில் இடம்பெற்றது.
ஓவியர் மார்செல் டச்சம்ப் இதனை வரைந்து ஏலத்திற்கு வைத்திருந்தார்.
இதன்போது, தாடி மீசை கொண்ட இந்த விசித்திர மோனா லிசா ஓவியம் 7,50, 000 டொலர்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
மோனா லிசா ஓவியம், வரலாற்றுப் புகழ்பெற்ற ஓவியர் லியனார்டோ டாவின்சியால் வரையப்பட்டது.
இந்த ஓவியத்தை மார்செல் டச்சம்ப் சிறிது மாற்றம் செய்து 1964 ஆம் ஆண்டு வரைந்துள்ளார்.
தற்போது இந்த ஓவியம் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages