3 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்; 6 ஆவது சந்தேகநபர் கைது - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/31/2017

3 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்; 6 ஆவது சந்தேகநபர் கைது


மூதூர், பெரியவெளி சிறுமிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கின் 6ஆவது சந்தேகநபர், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு பிரிவினரால், 30ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்ட அவர், நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம், எதிர்வரும் 13ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மரபணு பரிசோதனை அறிக்கையின் அடிப்படையிலேயே, குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று அறியமுடிகின்றது.
முதூர், பெரியவெளில் உள்ள பாடசாலையொன்றுக்கு, பிரத்தியேக வகுப்புக்கு, 2017.05.28  அன்று  சென்றிருந்த சிறுமிகள் மூவர், பாடசாலையில் கட்டட நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அறுவரால், பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, தோப்பூர் பகுதியைச் சேர்ந்த கட்டடத்த தொழிலாளர்கள் ஐந்து பேரை, கிராமவாசிகள் பிடித்து, மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், மூதூர் நீதவான் நீதிமன்றத்தால், அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டார்.  பாதிக்கப்பட்ட சிறுமிகள் எவரும், சந்தேகநபர்களை அடையாளம் காட்டவில்லை.
அதனையடுத்து, சந்தேகநபர் சகலரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையிலேயே, வழக்கின் ஆறாவது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages