ரஜினியின் '2.O' - பிரமாண்ட 3D மேக்கிங் வீடியோ! - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/07/2017

ரஜினியின் '2.O' - பிரமாண்ட 3D மேக்கிங் வீடியோ!

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் '2.O' படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டி வருகின்றன. ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். '2.O' படத்தின் ம்முதல் மேக்கிங் வீடியோவை இயக்குநர் ஷங்கர் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியிட்டார். இந்நிலையில் இன்று இரண்டாவது மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது.

லைகா நிறுவனம் அதிக பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. 400 கோடி ரூபாய் செலவில் தற்போது உருவாகியிருக்கிறது ‘2.O'. 2D காட்சிகளை 3D-யாக மாற்றும் வகையில் இல்லாமல் படம் எடுக்கும்போதே 3D கேமரா மூலம் எடுக்கப்பட்டது.
இந்தப் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி, எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தன. எந்தத் தமிழ்ப் படத்திற்கும் இல்லாத அளவுக்கு பயங்கரமாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு '2.O' போஸ்டரோடு ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்தப்படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு வெளியிட, படக்குழுவினர் முன்பு திட்டமிட்டிருந்தனர். ஆனால், கிராஃபிக்ஸ் பணி காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
3.36 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த மேக்கிங் வீடியோவில் படத்தின் 3D காட்சிகள் எப்படி உருவாக்கப்பட்டன என்பது விளக்கப்பட்டிருக்கிறது. ரஜினிகாந்த், ஷங்கர், அக்‌ஷய் குமார், நீரவ் ஷா ஆகியோர் விளக்கியிருக்கிறார்கள்.

வெளியாகியிருக்கும் இரண்டாவது மேக்கிங் வீடியோவின் மூலம் படக்குழுவின் டெக்னிக்கல் டீமின் பிரமாண்டமான உழைப்பு தெரிகிறது. ரஜினி ரசிகர்கள் #2pointO #ChittiIsBack எனும் ஹேஸ்டேக்குகளின் வழியாக '2.O''-வை ட்ரெண்டாக்கி கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages