திருகோணமலையில் இன்றுடன் 239 ஆம் நாள் தெருவில் வாழ்க்கை ! - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/24/2017

திருகோணமலையில் இன்றுடன் 239 ஆம் நாள் தெருவில் வாழ்க்கை !2007 ஆண்டு எனது மகளை இறுதியாக கண்டேன் இன்று வரை எந்த தகவலும் இல்லை என கண் கலங்கிய நிலையில் தனது மனக்குமிறலை தெரிக்கின்றார். கிருஸ்ணபிள்ளை பவளராணி,….
கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களை தேடியலையும் சங்கத்தினரால் திருகோணமலையில்  முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தின் 238 ஆம் நாளான இன்று 23 நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்…….
நாங்கள் திருகோணமலை 06 ஆம் கட்டை இலுப்பக்குளம் பிரதேசத்தில் வசித்து வந்தோம் 1995 ஆண்டுகளில் இடம் பெயர்ந்து யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் தஞ்சம் புகுந்து சென்றிருந்தோம். 2002 ஆண்டு வரை அங்குதான் வசித்து வந்திருந்தோம். எனது மகன் கிருஸ்ணபிள்ளை சதீஸ்குமார் 29 வயது எனக்கு 5 பிள்ளைகள் 3 ஆண் 2 பெண் சதீஸ்குமார் கராச் வேலை நிமிர்த்தம் 2001 ஆண்டு இருந்து கிளிநொச்சி கனகபுரதில் எனது சகோதரன் வீட்டில் வசித்திருந்து வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தான்.
இப்படியாக நாட்கள் கடந்தோடியது அவர் தொழில் புரியும் இடத்திற்கு அடிக்கடி நியூட்டன் என்பவர் வந்து வாகனங்கள் பழுது பார்ப்பது வழக்கமாக இருந்துள்ளது அந்த வேளையில் தான் எனது மகனும் அவர்களுடன் பேசியுள்ளான் அவனுக்கும் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இருக்கவில்லை.
2001 ஆண்டு எனது கணவன் நோய் வாய்ப்பட்டு இறந்ததன் பின்னர் திருமலை வந்துவிட்டேன். யுத்தம் காரணமாக நான் அங்கு செல்லவில்லை ஆனால் 2007 ஆண்டு எனது மகளை இறுதியாக கண்டேன் இன்று வரை எந்த தகவலும் இல்லை எனது மகன் 2009.05.18 ஆம் திகதி யுத்தம் முடிவுற்ற பின்னர் இடம் பெயர்ந்து வந்தவேளை கண்டவர்கள் உள்ளனர் யார் பிடித்தது என்று எனக்கு தெரியாது.
நான் எனது மகனை தேடி செல்லாத இடம் இல்லை நெஞ்சிலுவைச்சங்கம் மனித உரிமை ஆணைக்குழு பொலிஸ் தலைமையகம் ஆகிய இடங்கள் ஏன் பூசா தடுப்பு முகாமிற்கு கூட சென்று விசாரித்தேன் எதுவித தகவலும் இல்லை ஆனால் எனக்கு நம்பிக்கை உண்டு என் மகன் உயிருடன் நான் இருக்கிறான் என கண்கலங்கிய நிலையில் கூறினார்.
News by - quicknewstamil

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages