துபாயில் ரஜினியின் 2.0 இசை வெளியீட்டு விழா... என்னென்ன ஸ்பெஷல் ஏற்பாடுகள் தெரியுமா? - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/24/2017

துபாயில் ரஜினியின் 2.0 இசை வெளியீட்டு விழா... என்னென்ன ஸ்பெஷல் ஏற்பாடுகள் தெரியுமா?


லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டங்களின் பிரம்மாண்டம் என வர்ணிக்கப்படும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் அக்டோபர் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி 2.0 படக்குழுவினர் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர். வரும் அக்டோபர் 26ம் தேதி மாலை, ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷ்ய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய 2.0 படக்குழுவினர், அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து ஹெலிக்காப்டர் மூலமாக உலகின் ஒரே ஒரு 7 நட்சத்திர ஹோட்டலான Burj- Al - Arab செல்கின்றனர்.

உலகப் பத்திரிகையாளர்கள் 
அங்கு உலகளாவிய 2.0 படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. உலகின் முக்கிய பத்திரிக்கைகளின் நிருபர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து 2.0 படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி 27ம் தேதி நடைபெறுகிறது இசை வெளியீடு நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்

துபாய் அரசு அனுமதியுடன் 
* 2.0 படத்தின் இசை வெளியீடு பர்ஜ் பார்க்கில் நடைபெறுகிறது. முதன் முறையாக இந்த இடத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு நடத்த துபாய் அரசாங்கம் உத்தரவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 125 சிம்பொனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

* இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 2.0 படத்திலிருந்து ஒரு பாடலை இந்நிகழ்ச்சியில் நேரலையாக இசையமைக்கவுள்ளார்

* சூப்பர் ஸ்டார் ரஜினி - இயக்குநர் ஷங்கர் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான பாடல்களுக்கு பாஸ்கோ நடனக்குழு சிறப்பு நடனவிருந்து அளிக்கவுள்ளனர்.

* 12000 பேர் இந்நிகழ்ச்சியைப் பார்க்க இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது

* துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூபாய் 2 கோடி செலவில் பிரம்மாண்ட எல்இடி திரை போடப்பட்டு இந்நிகழ்ச்சியை நேரலையாகக் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒன்றறை லட்சம் பேர் பார்க்கக்கூடும் என்ற கூறப்படுகிறது.

* துபாய் அரசர் இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. * துபாயில் முதல் முறையாக இத்தனை பேனர்கள், டிஜிட்டல் விளம்பரங்கள் செய்யப்படும் முதல் படம் 2.0 தான். உலகமே எதிர்நோக்கும் இந்நிகழ்வைப் பார்க்க பல பிரபலங்கள் துபாய் விரைந்த வண்ணமுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages