ரஜினியின் 2.0 படம் தமிழ்புத்தாண்டுக்கு ரிலீஸ் - கோடையில் கொண்டாட்டம் #2Point0 - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

Sunday, October 29, 2017

ரஜினியின் 2.0 படம் தமிழ்புத்தாண்டுக்கு ரிலீஸ் - கோடையில் கொண்டாட்டம் #2Point0


ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள திரைப்படம் 2.0. எமி ஜாக்ஷன் கதாநாயகியாகவும், அக்ஷய் குமார் வில்லனாகவும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கதாநாயகன் ரஜினிகாந்த்தின் கெட்டப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமான முறையில் துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ரூ.400 கோடி செலவில் தயாரிப்பு 
சுமார் 400 கோடியில் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. 2 ஆண்டுகளாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் 2.0 திரைப்படம் 2018 ஜனவரி மாதத்தில் குடியரசு தினத்தில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

அதே நாளில் பால்கி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள பேட்மேன் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி, அக்ஷய் குமார் நடித்துள்ள 2.0 திரைப்படம் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ரஜினி, அக்ஷய் குமார் நடித்துள்ள 2.0 திரைப்படம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதர் பிள்ளை தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கோடை விடுமுறையை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages