2.0 விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த 2 லிட்டில் ஸ்டார்ஸ் - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/29/2017

2.0 விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த 2 லிட்டில் ஸ்டார்ஸ்


2.0 இசை வெளியீட்டு விழாவுக்கு ஆயிரம் பேர் வந்திருந்தாலும் 2 முக்கியமானவர்கள் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்கள். ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் பிரமாண்டமாக நடைபெற்றது. விழாவை பார்த்து வியக்காதவர்களே இல்லை என்று கூறலாம்.

இசை வெளியீட்டு விழாவுக்கு ஆயிரம் பேர் வந்திருந்தாலும் மேடையில் ரஜினி அருகில் வந்து நின்ற 2 குட்டி விருந்தாளிகள் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தம்பதியின் மகன்களான யாத்ரா, லிங்கா ஆகியோர் தாத்தா ரஜினிகாந்த் அருகில் வந்து மேடையில் நின்றனர். அவர்கள் ரஜினியின் மீது கைபோட்டு கொஞ்சிப் பேசியது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

2.0 இசை வெளியீட்டு விழாவிற்கு ஒரு மகளாக வந்ததாக ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்தார். இந்த விழாவில் கலந்து கொள்வதில் மிகவும் பெருமை அடைகிறேன் என்றார் அவர்.

2.0 இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்தின் குடும்பத்தார் அனைவரையும் ஒரே இடத்தில் வைத்து பார்த்தது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages