பாஜக புண்ணியத்தில் ரூ.170 கோடி வசூலித்த மெர்சல்- ஜாக்பாட் கலெக்ஷன்! - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/24/2017

பாஜக புண்ணியத்தில் ரூ.170 கோடி வசூலித்த மெர்சல்- ஜாக்பாட் கலெக்ஷன்!

  
ஒரு படத்தில் அரசியல் வசனம் இருந்தால் அதில் இருந்து கிளம்பும் சர்ச்சைகளே அந்தப் படத்தை ஜாக்பாட் வசூல் குவிக்க உதவும் என்பதற்கு சான்றாகி இருக்கிறது மெர்சல் திரைப்படம். ஒரு வாரத்தில் மட்டுமே அந்த திரைப்படம் உலக அளவில் ரூ. 170 கோடி அள்ளி வசூலில் சாதனை படைத்துள்ளது. ஒரு திரைப்படம் எப்படி அதிகம் பேரால் பேசப்படும் என்பதற்கு அதில் தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப வசனங்களை வைத்தாலே போதுமானது. அதிலும் அரசியல் தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அந்தப் படத்திற்கு விளம்பரமே தேவையில்லை. மெர்சல் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான தேனான்டாள் பிலிம்ஸ் அதை உணர்ந்திருக்கும். ரூ. 80 கோடி பட்ஜெட்டில் மெர்சல் படம் திட்டமிடப்பட்டு அது ரூ. 130 கோடி வரை எட்டியதால் போட்ட பணம் கிடைக்குமா என்று களக்கத்தில் இருந்தனர் தயாரிப்பு நிறுவனத்தினர்.

ஆனால் அவர்களின் கவலையை போக்கியது மெர்சல் படம் தொடர்பாக எழுந்த சர்ச்சை. படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா வசனத்தை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பு நிறுவனம் இதனால் வசூல் பாதிக்குமோ என்று அஞ்சி தேவைப்பட்டால் அந்த வசனங்களை நீக்கத் தயார் என்று சொன்னது.

ஆனால் படக்குழுவினருக்கு அரசியல் எதிர்ப்பு பெரும் விளம்பரத்தை தேடித் தந்துள்ளது. படம் ரிலீசான முதல் நாளில் தமிழ்நாட்டில் ரூ.18 கோடியும், கர்நாடக, கேரள மாநிலங்களில் ரூ. 3 கோடியும் வசூலை அள்ளியுள்ளது. உலக அளவில் ரூ. 35 கோடியை படம் அள்ளியுள்ளது.

மொத்தத்தில் ஒரு வார முடிவில் மெர்சல் படம் உலக அளவில் ரூ. 45 கோடியை வசூல் ள்பட ரூ. 160 முதல் ரூ. 170 வரை ஜாக்பாட் வசூலை அள்ளியள்ளதாக தெரிகிறது. பாஜக எதிர்ப்பு தெரிவித்த அந்த வசனங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காகவே படத்தை பார்த்த கூட்டம் தான் இதில் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.

வழக்கமாக விஜய் படம் என்றால் முதல் ஒரு வாரத்திற்கு அவருடைய ரசிகர்களின் பட்டாளம் தான் தியேட்டரில் அதகலப்படுத்துவர். ஆனால் மெர்சல் படம் அரசியல் விமர்சனத்திற்கு ஆளானதால் விஜய், அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல சாதாரண மக்களும் கூட அந்தப் படத்தை பார்ப்பதற்கான ஆவல் எழுந்ததன் விளைவாகவே இந்தப் படம் வசூலை வாரி குவித்துள்ளதாகக் கூறுகின்றனர் திரைத்துறையில் அனுபவம் உள்ளவர்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages