இவர் தான் 10 ரூபாய் டாக்டர் ராமசாமி: இவரைப் பற்றி தெரியுமா? - Trincoinfo

புதிய தகவல்கள்

Post Top Ad

Post Top Ad

10/25/2017

இவர் தான் 10 ரூபாய் டாக்டர் ராமசாமி: இவரைப் பற்றி தெரியுமா?


தமிழகத்தின் கோவில்பட்டி அருகில் உள்ள நாலாட்டின்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு பகவதி என்ற மனைவியும், விஜயா என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது.
திருநெல்வேலியில் மருத்துவ படிப்பை முடித்த ராமசாமி, அதன் பின் கருங்குளம் அரசு மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்துள்ளார். வேலை நேரம் போக கிளினிக் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இவரது கிளினிக் தென்காசியின், வாய்க்கால் பாலம் அருகில் உள்ளது.
அங்கு வரும் மக்களுக்கு மருத்துவம் பார்க்கும் இவர், அவர்கள் கொடுக்கும் பணங்களையே வாங்கிக் கொள்கிறார். ஒரு சிலருக்கு இவரே பேருந்தில் செல்வதற்கு பணம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், தான் பணத்தை பெரிதாக பார்ப்பதில்லை. தன்னிடம் பார்க்க வருபவர்கள் இருந்தால், கொடுப்பார்கள், இல்லை என்றால் சென்றுவிடுவார்கள்.
ஒரு சிலருக்கு நானே பணம் கொடுத்து அனுப்பியிருக்கிறேன். அப்படி ஆரம்பித்தது தான் இது, கடந்த 40 வருடமாக அப்படியே சென்று கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாயாகாத்தான் வாங்கினேன். தற்போது தான் பத்து ரூபாய், பணம் பெரியவிடயமில்லை, நாம் பார்க்கும் வேலைக்கு மரியாதை கிடைக்க வேண்டும்.
இலவசமாக் கிடைக்கும் எதற்கும் மரியாதை கிடைப்பதில்லை, அதுமட்டுமின்றி அடிப்படை மருந்துச் செலவுக்கும், கிளினிக் மெயின்டெனென்ஸுக்கும் பணம் வேணும் என்பதால் அவர்கள் முடிந்த அளவு கொடுக்கும் பணத்தை பெற்றுக் கொள்வேன்.

ஒரு சிலர் களைத்த முகத்துடன் கையில் 20 ரூபாய் பணத்துடன் சார் தன்னிடம் இவ்வளவு தான் இருக்கிறது என்று கூறுவார்கள்.
அப்போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும், அந்த இருபது ரூபாயை வாங்கிக் கொண்டு ஊசி போட்டுவிட்டு மாத்திரையையும் கொடுத்து அனுப்பிவிடுவேன்.
பணம் எவ்வளவும் வேண்டும் என்றாலும் சம்பாதித்துவிடலாம், ஆனால் மனிதர்களை சம்பாதிப்பது கடினம். ஆனால் அந்த வகையில் நான் நிறைய மனிதர்களைச் சம்பாதித்திருக்கிறேன் என்று பெருமையாக கூறியுள்ளார் ராமசாமி.
பால்வினை நோய்களுக்கான டிப்ளமோ இன் வெனீரியாலஜி முடித்திருக்கும் ராமசாமியை, அந்த பகுதி மக்கள் 10 ரூபாய் டாக்டர் என்று தான் அழைக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages