728x90 AdSpace

Latest News

வாழைக்குலை திருட முயற்சித்தவரை நாய் கடித்துக் குதறியதில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி



திருகோணமலை வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழைக் குலைகளைத் திருட முயற்சித்த ஒருவரை நாய் கடித்துக் குதறியதில் பலத்த காயங்களுடன்  கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வான்எல, ஆயிலியடி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரே நாய்க்கடிக்கு உள்ளாகியுள்ளார். குறித்த நபர் ஞாயிற்றுக்கிழமை இரவு  (24)  வாழைத்தோட்டமொன்றில் வாழைக்குலைகளைத் திருடுவதற்கு முயன்ற வேளையில், நாய் கடித்துக் குதறியதாக   பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: வாழைக்குலை திருட முயற்சித்தவரை நாய் கடித்துக் குதறியதில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி Description: Rating: 5 Reviewed By: ST
Scroll to Top